Values4All என்பது இலங்கை - ஆசிய மன்றத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்நிலை (ஆன்லைன்) தளமாகும், இது மூன்று பூரணப்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் இளைஞர்களிடையே சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது அவை பகிரப்பட்ட விழுமியங்கள், எங்கள் கதைகள் மற்றும் ##StrongertogetherSL. போன்றவையாகும்

இந்த திட்டங்கள் மூலம், ஒவ்வொரு சமூகத்திற்கும் அடித்தளமாக இருக்கும் பொதுவான மனிதநேய விழுமியங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், பாராட்டுவதற்கும், உள்வாங்குவதற்கும் இளைஞர்களை ஆதரிக்க மன்றமானது முயல்கிறது. மன்றமானது அதன் கூட்டாளர் அமைப்புகளின் மூலம், இளைஞர்கள் மற்றும் பெண்களை கதைசொல்லல் மற்றும் கலைகள் வழியாக நேர்மறையான சமூக ஈடுபாடுகளை ஊக்குவிப்பதில் ஈடுபடுகிறது, அத்துடன் ஒன்றிணைந்த ஈடுபாடுகள் மற்றும் நேர்மறையான சமூக ஊடக ஈடுபாடுகள் என்பவற்றையும் ஊக்குவிக்கின்றது.

நீங்கள் ஏதேனும் கருத்து அல்லது யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.