புகைப்படக் கதைகளுக்கான விண்ணப்பம் கோரல்
என்ன?
புகைப்படக் கதைகளின் ஊடாக பொது விழுமியங்கள் சார்ந்த அன்றாட இலங்கையர்களின் கதைகளை பகிர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
யாருக்காக?
18-29 வயதுக்கு இடைப்பட்ட யாவரும் விண்ணப்பிக்கலாம்.
எவ்வாறு?
- இரக்கம், மரியாதை, சகிப்புத்தன்மை, அமைதி, நேர்மை அல்லது ஒத்துழைப்பு போன்ற விழுமியங்களை வெளிப்படுத்திய அல்லது அனுபவித்த தருணம் ஒன்றை காட்டும் புகைப்படம் ஒன்றை எடுங்கள். அந்தப் புகைப்படத்திற்கு பின்னுள்ள கதையை எம்முடன் பகிர்ந்து கொள்வதனை உறுதி செய்யுங்கள்.
-
உங்கள் கதைக்கு பின்வரும் வழிகாட்டிகளைப் பின்பற்றுங்கள்:
- சொற்களின் எண்ணிக்கை (250-300) எந்த மொழியாய் இருந்தாலும்.
- குறிப்பு: குடும்பம்,நண்பர்கள், அந்நியர்கள் அல்லது செல்லப்பிராணியுடன் நீங்கள் செலவிட்ட ஒரு தருணம்.
- பிரதான கேள்வி: இந்த அனுபவத்தின் ஊடாக நீங்கள் கற்றுக் கொண்ட விழுமியம் என்ன? உங்களில் ஏதேனும் மாற்றத்தினை நீங்கள் உணர்ந்தீர்களா – உளப்பாங்களில் அல்லது வாழ்க்கை முறையில்? உங்கள் புகைப்படத்தினையும், கதையினையும் niresh@sarvodaya.com இற்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
ஏன்?
உங்கள் கதைகள் ஏனையோருக்கு ஆதர்சனமாக அமையட்டும்.
புகைப்படம் சார்ந்த குறிப்புகள்:
- புகைப்படங்கள் JPEG வடிவத்தில் சேமிக்கப்படல் வேண்டும்.
- புகைப்படத்தின் ரெஷலூஷன் ஆகக் குறைந்தது 300 dpi ஆக இருத்தல் வேண்டும்.
- புகைப்படங்கள் பல வர்ணங்களில் அல்லது தனி வர்ணத்தில் இருக்கலாம்.
- புகைப்படங்கள் கைபேசியிலோ, புகைப்படக் கருவியிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
கவனத்தில் கொள்க: புகைப்படங்கள் சிறுவர்களையோ அல்லது 18 வயதுக்கு குறைந்தவர்களையோ உள்ளடக்கியிருக்கக் கூடாது.
சர்வோதயத்துடன் இணைந்து ஆசிய மன்றத்தினால் புகைப்படங்களும், கதைகளும் தெரிவு செய்யப்படும்.
எமது நிகழ்ச்சிகள் குறித்து அறிந்து கொள்வதற்கு எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்.