திட்ட கண்ணோட்டம்
விழுமியங்கள் கல்விசார் நிபுணர்களின் உதவியுடன், மதத் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களின் கலந்தாய்வுடன் இலங்கை ஆசிய மன்றத்தினால் Values4All பாடவிதானம் வடிவமைக்கப்பட்டது.
சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கப் பெறும் இந்த பாடவிதானம் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான செயற்றிறன் மிக்க செவிமடுத்தல், சமாதானம், மதிப்பு, சகிப்புத்தன்மை, பச்சாதாபம், நேர்மை மற்றும் கபடமின்மை மற்றும் ஒன்றாக பணியாற்றல் (ஒத்துழைப்பு) போன்ற ஏழு விழுமியங்களை உள்ளடக்கியிருக்கின்றது.
நேர்நிலையான விழுமியங்களுக்கான உறுதிமொழியை ஊக்குவிப்பதில் ஆர்வங் கொண்ட எவரினாலும் பயன்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை இந்த கைநூல் முன்னிறுத்துகின்றது. இளைஞர் கழகங்களில் இளைஞர் குழுக்களினால் பயன்படுத்தச் செய்வதே இந்த கைநூலின் நோக்கமாகும். பாடசாலைகள் போன்ற ஏனைய சூழ்நிலைகளிலும் பயன்படுத்தக் கூடியதாக அது உள்ளது. பங்குபற்றுனர்களின் உள்ளூர் பிரதேசத்தினைப் பிரதிபலிக்கும் உதாரணங்கள் அல்லது பொருத்தமான வேறுபட்ட வயது குழுக்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கக் கூடியதாகவும், மாற்றக் கூடியதாகவும் இந்த ஆவணம் அமையும்.